மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
கரூர்,
மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொதுமக்கள் கூடும் இடங்களில் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம் திட்டம் மற்றும் அம்மா திட்ட முகாம் போன்ற அனைத்து கூட்டங்களுக்கும் வருகிற 31-ந்தேதி வரை கரூர் மாவட்டத்தில் நடைபெறாது எனவும், மேலும் பொதுமக்கள் மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலக பெட்டியில் செலுத்தலாம் எனவும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story