‘கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
‘தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு மக்கள் அதிகமாக கூடக்கூடிய அனைத்து பகுதிகளிலும் நடக்கும் நிகழ்வுகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், வருகிற 31–ந்தேதி வரை வாரச்சந்தைகளை மூடவும், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில், மாவட்டத்தில் நகர மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள கோவில்களில் மக்கள் அதிகம் கூடும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தற்காலிகமாக வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கோவில் செயல் அலுவலர்கள் இதுகுறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆதரவு
இதுதவிர தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளும் வருகிற 31–ந்தேதி வரை மூடப்பட வேண்டும். அந்தந்த பகுதி பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், கிராமப்புற பஞ்சாயத்து செயலாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரச்சந்தைகள் மூடப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் முழுஆதரவை தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story