உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சத்தில் விவசாய பண்ணை கருவிகள்; அதிகாரி வழங்கினார்
தோட்டக்கலைத் துறை மற்றும் மலை பயிர்கள் துறை கூட்டுப்பண்ணைத் திட்டம் சார்பில் கொட்டாரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள விவசாய பண்ணை கருவிகள் வழங்கும் விழா அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி,
விவசாய விளைநிலங்களில் களை எடுக்கும் கருவி, புல்வெட்டும் கருவி உள்பட பல உபகரணங்களை 100 சதவீத மானியத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் விமலா, அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டக்கலைத் துறை துணை அலுவலர் வடிவேல் முருகன், உதவி அலுவலர்கள் சுதா, குமார், சுதாகர், கொட்டாரம் உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் முருகன் கொட்டாரம் வாழை உற்பத்திக்குழு தலைவர் சதாசிவம், செயலாளர் மணி இந்திரன், பொருளாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தக்கலையில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் வழங்கும் விழா நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) இசக்கிமுத்து தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பண்ணை கருவிகளை வழங்கினார். இதில், கல்குறிச்சி, கப்பியறை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.10 லட்சத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்பட்டது. உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜேஷ், மணிகண்டன், ரமேஷ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story