அம்பையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அம்பையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
அம்பை,
அம்பையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் அம்பையில் பாபநாசம் மெயின் ரோட்டில் ரெயில்வே கிராஸிங் அருகே நேற்று முன்தினம் திடீரென புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த ரகுமான் காலனி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று அம்பை தாசில்தார் கந்தப்பனிடம், புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
உரிய நடவடிக்கை
மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் கூறுகையில், “ஏற்கனவே இந்த பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் எடுத்து கூறியுள்ளேன். மறு அறிவிப்பு வரும் வரை அந்த கடையை திறக்க கூடாது என்று கூறியுள்ளேன். அரசு உத்தரவுபடி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தி.மு.க. நகர செயலர் பிரபாகரன், காங்கிரஸ் நகர தலைவர் முருகேசன், ம.தி.மு.க. நகர செயலர் முத்துசாமி, கம்யூனிஸ்டு வடிவேல், பா.ஜ.க நகர தலைவர் அரிராம் மற்றும் ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story