ஆற்காடு, கலவை அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நோயாளிகளுக்கான வார்டுகள் குறித்து கலெக்டர் திவ்யதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
ஆற்காடு,
ஆற்காட்டில் உள்ள அரசினர் மருத்துவமனை மற்றும் கலவையில் உள்ள அரசினர் மருத்துவமனைகளில் நேற்று அவர் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்களிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகளிடம் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது ஆற்காடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசங்கரி, தாசில்தார் இந்துமதி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story