75 கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்கள்: சென்னையில், 407 அம்மா உணவகங்கள் இன்று இயங்கும்
‘சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 407 அம்மா உணவகங்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் செயல்படும்’, நோய் தொற்று பரவாமல் தடுக்க புதிதாக 75 கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்களும் வழங்கப்பட்டு உள்ளன என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறினார்.
சென்னை,
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டலத்திற்கு 5 வாகனங்கள் என மொத்தம் 75 கிருமி நாசினி தெளிக்கும் ஜெட்ராடிங் எந்திரங்களை, கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் வழங்கினார்.
பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் நடவடிக்கையாக மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளை தெளிக்க ‘பவர் ஸ்பிரேயர்’ உட்பட 500 நவின எந்திரங்கள், அவற்றை இயக்குவதற்கான பணியாளர்கள் அந்தந்த வார்டுகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்கள் உட்பட பெரிய கட்டிடங்களில் கிருமி நாசினிகளை தெளிக்க ஏதுவாக அதிக சக்தியுடன் கூடிய 75 கிருமி நாசினி தெளிக்கும் ‘ஜெட்ராடிங்’ எந்திரங்கள் மண்டலத்திற்கு 5 வாகனங்கள் வழங்கப்படுகிறது.
வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு
சென்னை மாநகராட்சியின் வீடுகளில் கொசுப்புழுக்களை ஆய்வு செய்யும் பணியாளர்களை கொண்டு வீடுகள் தோறும் சென்று சளி, இருமல், காய்ச்சல் உள்ளனவா? என கணக்கெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவுற்ற பின் இது தொடர்பான விவரங்கள் மண்டல மருத்துவ அலுவலர்களுக்கும் பொதுசுகாதார துறை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படும்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வழக்கம் போல் அம்மா உணவகங்கள்
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பிரதமர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் சுயஊரடங்கு உத்தரவு மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 407 அம்மா உணவகங்களும் நாளை வழக்கம் போல் இயங்கும். அதேபோன்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடற்றோர் மாநகராட்சியின் 53 காப்பகங்களில் தங்கி பயன்பெற்று கொள்ளலாம். இவர்களுக்கான உணவினை வழங்க மாநகராட்சியின் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் வீடற்றோரை தங்க வைப்பதற்காக மாநகராட்சியின் 156 சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்கும் அரசின் இந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் எஸ்.பி.பாலசுப்பரமணியம். சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் ராமசாமி மற்றும் செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story