கோபி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
கோபி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் 2 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி எடுக்கிறது. காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கிறது. நேற்று முன்தினமும் காலை முதல் மாலை வரை கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெயில் தாண்டவமாடியது.
இந்தநிலையில் இரவு 10.30 மணியவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த சூறாவளிக்காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கோபி, கலிங்கியம், பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடம் நிற்காமல் மழை பெய்தது.
இந்த பகுதிகளில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் கதலி, ரஸ்தாளி, பச்சைநாடன், நேந்திரம் ரக வாழைகள் பயிரிட்டுள்ளார்கள்.
வாழைகள் அனைத்து குலை தள்ளிய நிலையில் இருந்தது. திடீரென வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சுமார் 2 ஆயிரம் வாழைகள் முறிந்தன.
வாழைகள் முறிந்த கிடப்பதை பார்த்து வேதனை அடைந்த விவசாயிகள், 'இன்னும் 2 மாதம் சென்றிருந்தால் அனைத்து தார்களை அறுவடை செய்திருப்போம். இப்போது குலை தள்ளிய நிலையில் முறிந்து விட்டன. வேளாண்மை அதிகாரிகள் வந்து பார்த்து இழப்பீடுகளை ஆய்வு செய்து நிவாரணம் பெற்று தரவேண்டும்' என்றார்கள்.
Related Tags :
Next Story