கொரோனா வைரஸ் பரவிவருவதை தடுக்க நடவடிக்கை: ‘காஞ்சீபுரம் மாவட்டத்தை முடக்க அரசு உத்தரவிட்டால் செயல்படுவோம்’ - கலெக்டர் தகவல்


கொரோனா வைரஸ் பரவிவருவதை தடுக்க நடவடிக்கை: ‘காஞ்சீபுரம் மாவட்டத்தை முடக்க அரசு உத்தரவிட்டால் செயல்படுவோம்’ - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 March 2020 4:00 AM IST (Updated: 23 March 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவிவருவதை தடுக்கும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தை முடக்குவது குறித்து தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வந்தால் முறைப்படி செயல்படுவோம் என்று காஞ்சீபுரம் கலெக்டர் பா.பொன்னையா தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 


காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேற்று இரவு அவரது இல்லத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக இன்று (அதாவது நேற்று) ஊரடங்கு உத்தரவையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைதியாகவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பும் அளித்தனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தமிழகத்தில் மேலும் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய வசதியாக அவர்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

காஞ்சீபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களை முடக்குவதற்கு மத்திய அரசு, மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. எனவே இது குறித்த உத்தரவு தமிழக அரசிடம் இருந்து வந்தால் முறைப்படி செயல்படுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story