மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 23 March 2020 3:45 AM IST (Updated: 23 March 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானர்.

தென்காசி, 

தென்காசி அருகே உள்ள மேலப்புலியூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் அய்யப்பன் (வயது 19). இவர் அந்த பகுதியில் வயலில் உள்ள கிணற்றில் நேற்று குளிப்பதற்காக சென்றார். அப்போது, உயரத்தில் இருந்து கிணற்றில் குதித்தார். 

அப்போது, அந்த வழியாக சென்ற மின்கம்பி அவர் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story