மருத்துவ பணியாளர்களின் சேைவக்கு நன்றி தெரிவிக்க முதல்-மந்திரி எடியூரப்பா, தேவேகவுடா கை தட்டினர்


மருத்துவ பணியாளர்களின் சேைவக்கு நன்றி தெரிவிக்க முதல்-மந்திரி எடியூரப்பா, தேவேகவுடா கை தட்டினர்
x
தினத்தந்தி 23 March 2020 5:19 AM IST (Updated: 23 March 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை தடுப்பதில் மருத்துவ பணியாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க முதல்-மந்திரி எடியூரப்பா, தேவேகவுடா ஆகியோர் கைதட்டினர்.

பெங்களூரு, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் டாக்டர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் சேவையாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, நாட்டு மக்கள் மாலை 5 மணிக்கு 5 நிமிடங்கள் கைதட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி மாலை 5 மணிக்கு பெங்களூரு மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, கைகளை தட்டினர். முதல்-மந்திரி எடியூரப்பா டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டின் மாடியின் மாடத்திற்கு வந்து கைகளை தட்டினார். அப்ேபாது அவரது மகள் மற்றும் பேத்தி உள்ளிட்டோர் உடன் இருந்து கைகளை தட்டினர்,

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே வந்து, கைகளை தட்டினார். அடுக்குமாடிகளில் குடியிருப்போர் ஜன்னல் வழியாக தங்களின் கைதட்டலை வெளிப்படுத்தினர்.

அதேபோல் நகர மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தும், மாடிகளில் இருந்தும், கைகளை தட்டி கரவொலி எழுப்பினர். சிலர் கையில் தட்டை வைத்து, ஒலி எழுப்பினர். மேளங்கள் அடித்தும், குரலை உயர்த்தியும் தங்களின் நன்றியை மகிழ்ச்சி பொங்க வெளிப்படுத்தினர்.

கைதட்டிய பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 9 மாவட்டங்கள் மூடப்பட்டுள்ளன. கூலித்தொழிலாளர்களுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதுகுறித்து சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தொடர் திட்டமிட்டபடி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும்” என்றார்.


Next Story