உடையார்பாளையத்தில் அச்சுறுத்தும் அரசு பள்ளி கட்டிடம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் லையன் மேட்டு தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 158 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அரியலூர்,
கடந்த 6 மாதத்திற்கு முன்பு பள்ளியின் 3,4,5-ம் வகுப்பு களுக்கான வகுப்பறை கட்டிடத்தின் ஓடுகள் முழுவதும் சேதமடைந்தன. மேலும் கட்டிட சுவரும் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டது. இதனால் அந்த கட்டிடங்களில் இயங்கிய வகுப்பறைகள் தற்போது 1, 2-ம் வகுப்பறைகளில் இயங்கு கிறது. இதனால் நெருக்கடி யில் அமர்ந்து மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் சேதமடைந்த கட்டிடங் களின் ஓடுகள் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் கட்டிடம் இடிக்கப்படவில்லை. எனவே எந்தவித அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, வகுப்பறைகளுக்கு புதிய கட்டிடம் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் கோரிக்கை விடுத் துள்ளனர்.
Related Tags :
Next Story