கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: திசையன்விளை வங்கியில் ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: திசையன்விளை வங்கியில் ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 24 March 2020 4:00 AM IST (Updated: 24 March 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, திசையன்விளை வங்கியில் ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

திசையன்விளை, 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதால், அதை கட்டுப்படுத்த ஊரங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் வங்கிகள், டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், வாடிக்கையாளர்கள் இடைவெளி விட்டு வரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியிலும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்ெனச்சரிக்ைகயாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இங்கு வங்கியின் முன்பு தண்ணீர் மற்றும் கைகழுவும் திரவம் வைக்கப்பட்டு உள்ளது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கைகழுவும் திரவத்தால் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே வங்கிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேபோன்று வங்கியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களை மட்டுமே வங்கிக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். அவர்கள், வங்கியில் தங்களது பணப்பரிவர்த்தனை தொடர்பான பணிகளை முடித்து விட்டு வெளியே வந்த பின்னரே அடுத்து மற்ற 5 வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் வங்கியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் முக கவசம் அணிந்து பணியாற்றினர்.

இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளிலும் ஊழியர்கள் முககவசம் அணிந்து பணியாற்றினர். வங்கியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், குறைவான எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்களை அனுமதித்தனர். ெதன்காசியில் உள்ள வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களும் முககவசம் அணிந்து பணியாற்றினர்.


Next Story