ஸ்ரீவில்லிபுத்தூரில் பூக்குழி திருவிழா: கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் அக்னி சட்டி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் கோவிலுக்கு வெளியே சிலை வைத்து பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர். கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 12-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தநிலையில் ெகாேரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக பூக்குழி திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக பூக்குழி திருநாளான நேற்று அதிகாலை முதலே விரதம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே பூக்குழி இறங்கும் இடத்தில் நேர்த்திக்கடனை செலுத்தும் விதத்தில் சிறிய மாரியம்மன் சிலையை வைத்து தாங்கள் எடுத்து வந்த அக்னி சட்டியை வைத்து நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர்.
சிலர் கோவிலுக்கு வெளியே தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர். நேரம் செல்லசெல்ல பக்தர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் நெருக்கமாக நிற்காமல் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் மைக்கில் போலீசார் அறிவுரை வழங்கினர்.
Related Tags :
Next Story