மாவட்ட செய்திகள்

வெளிநாடு-பிறமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் கண்ணன் உத்தரவு + "||" + Those who are from overseas or abroad should be informed - Collector Kannan's order

வெளிநாடு-பிறமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் கண்ணன் உத்தரவு

வெளிநாடு-பிறமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் கண்ணன் உத்தரவு
வெளிநாடு-பிறமாநிலங்களில் இருந்து 2 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்துக்கு வந்தவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர், 

விருதுநகர்மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. விருதுநகர் மாவட்டத்திற்கு வெளிநாடு, பிறமாநிலத்தில் இருந்து கடந்த 2 மாதங்களில் வந்திருப்பவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவை இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதே வேளையில் கொரோனா அறிகுறி இருந்தாலும், அறிகுறிகள் இல்லையென்றாலும் தாங்களாகவே முன்வந்து பெயர், முகவரி மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைப்பேசி 1077 எண்ணில் உடனே தெரியப்படுத்த வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கொரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுகி உரிய பரிசோதனை எடுத்து கொள்ள வேண்டும். தங்களையும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் அனைவரையும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.