மாவட்ட செய்திகள்

முதியோருக்கு 2 மாதத்திற்கான மாத்திரைகள் வழங்கப்படுகிறது - தென்காசிஅரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் தகவல் + "||" + For 2 months for the elderly Tablets are provided Tenkasi Government Hospital Superintendent Information

முதியோருக்கு 2 மாதத்திற்கான மாத்திரைகள் வழங்கப்படுகிறது - தென்காசிஅரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் தகவல்

முதியோருக்கு 2 மாதத்திற்கான மாத்திரைகள் வழங்கப்படுகிறது - தென்காசிஅரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் தகவல்
முதியோருக்கு 2 மாதத்திற்கான மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று தென்காசிஅரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கூறினார்.
தென்காசி, 

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாத மாத்திரைகள் வாங்கும் முதியோர்களுக்கு 2 மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் வரவேண்டிய தேதிகள் எதுவாக இருந்தாலும், அவர்களுடைய உறவினர்களிடம் அவருடைய அட்டையை கொடுத்து 2 மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் 2 நாட்களுக்குள் வந்து மாத்திரைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.