வருகிற 31-ந் தேதி வரை பொது இ-சேவை மையங்கள் மூடல் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை பொது இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்கள் மூடப்படுவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வருகிற 31-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.
எனவே பொதுமக்கள் வருகிற 31-ந் தேதி வரை தங்களுக்கு தேவையான ஆன்லைன் சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட https://www.tnsevai.tn.gov.in/citizen/portallogin.aspx என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story