கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா தள்ளிவைப்பு


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 23 March 2020 11:30 PM GMT (Updated: 23 March 2020 9:01 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா தள்ளிவைக்கப்பட்டது.

சேலம்,

சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்திபெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழாவிற்காக கடந்த 17-ந் தேதி கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து திருவிழாவிற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் வருகிற 31-ந் தேதி வரை திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழா தள்ளிவைப்பு

அதைத்தொடர்ந்து எல்லைப்பிடாரிம்மன் கோவில் குண்டம் திருவிழா தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பலகை கோவில் முன்பு வைக்கப் பட்டுள்ளது.

அதில், கொரோனா வைரசின் காரணத்தால் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் வின்சென்ட் பகுதி பொதுமக்கள் ஆலோசனை நடத்தி வேறு தேதியில் திருவிழா நடத்த முடிவு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story