மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு + "||" + Intensive surveillance at the Corona Echo Refuse Checkpoint

கொரோனா எதிரொலி களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு

கொரோனா எதிரொலி களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.
களியக்காவிளை,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 31-ந் தேதி வரையிலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.


பக்கத்து மாநிலமான கேரளாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் எல்லைகள் மூடப்பட்டன. குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

3 அடுக்கு சோதனை

களியக்காவிளை மைய பகுதியில் உள்ள கோழிவிளை சோதனைச்சாவடி, மார்க்கெட் சாலை சோதனைச்சாவடி, தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை சோதனைச்சாவடி வழியாக ஆம்புலன்ஸ், பால் ஏற்றி செல்லும் வாகனம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதே சமயத்தில் ஏற்கனவே கேரளாவிற்கு சென்று விட்டு தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது.

மேலும் அங்கு 3 அடுக்கு சோதனை நடந்து வருகிறது. அதாவது, களியக்காவிளை எல்லை சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல், சளி இருக்கிறதா? என வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்த பின்பு, அதன் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடி அருகே மீண்டும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து படந்தாலுமூடு சோதனைச்சாவடி அருகே கால்நடைத்துறையினர் வாகனங்களில் கிருமிநாசினியை தெளித்தனர். இவ்வாறு 3 அடுக்கு சோதனைக்கு பிறகு தான் அத்தியாவசிய வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. மேலும் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி
தமிழக எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
2. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
3. களியக்காவிளை அருகே துணிகரம்; கடையில் கடலை மிட்டாய் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு, ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் கைவரிசை
களியக்காவிளை அருகே கடையில் கடலைமிட்டாய் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம், ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
4. களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் கைது
களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வடமாநிலத்துக்கு ரெயிலில் தப்பிச்செல்ல முயன்றபோது கர்நாடகாவில் சிக்கினர்.