சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்,
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரை தலைவராக வைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இயங்கி வருகிறது.
இங்கு காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம், தொகுப்பு ஊதிய அடிப் படையில் நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணிக்கு, குழந்தைகள் சம்பந்தப்பட்ட சட்டம் சார்ந்த சேவையில், ஓராண்டு பணி அனுபவ சான்று அவசியம். அவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து காஞ்சீபுரம் மாமல்லன் நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில், அடுத்த மாதம் 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story