ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த அண்ணனூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 50). இவர், அயப்பாக்கம் பகுதியில் துணிகளுக்கு இஸ்திரி போடும் கடை வைத்து நடத்தி வந்தார்.
இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் பிரபாகரன்(52) என்பவருடன் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் ஏரிக்கு குளிக்க சென்றார்.
அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற யுவராஜ், சேற்றில் சிக்கினார். இதனால் நீரில் மூழ்கிய அவர், மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்டநேரம் போராடி யுவராஜ் உடலை மீட்டனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story