கொரோனா வைரஸ்: அரசின் உத்தரவை மீறுபவர்கள் முட்டாள்கள் - துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடும் தாக்கு


கொரோனா வைரஸ்: அரசின் உத்தரவை மீறுபவர்கள் முட்டாள்கள் - துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடும் தாக்கு
x
தினத்தந்தி 24 March 2020 5:45 AM IST (Updated: 24 March 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு எடுத்து வரும் உத்தரவை மீறுபவர்கள் முட்டாள்கள் என மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது. முன்னதாக துணை முதல்-மந்திரி அஜித் பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

ஏனெனில் செயல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவை மக்கள் மீறுகிறார்கள். பொதுஇடத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி திரிகிறார்கள்.

இவர்கள் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளனர். இந்த முட்டாள்கள் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை உருவாக்குகிறார்கள்.

சிலரின் நடத்தை காரணமாக மருத்துவர்கள் மற்றும் போலீசாரின் உழைப்பு வீணடிக்கப்பட கூடாது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

Next Story