தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடை
தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு பிரசாரம்
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் நேற்று தென்காசி காந்தி சிலை முன்பு கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ஒரு வேனில் எல்.இ.டி. டிவி மூலம் இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அப்போது அதில் கூறப்பட்டதாவது:–
காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து அல்லது வெளியூரில் இருந்து திரும்பி வருபவர்களை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு அனுப்பி நோய்த்தொற்று இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.
நிகழ்ச்சிகள் நடத்த தடை
திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. கோவில் விழாக்கள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை நிறுத்த வேண்டும். கிருமி நாசினி மூலம் தினசரி 2 வேளை வீட்டின் கதவு, கைப்பிடி, நாற்காலிகள் கைப்பிடி, சுவர் மற்றும் தரை தளங்களை சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தை பேண வேண்டும். கொரோனா தொடர்பான தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரவ விடக்கூடாது. அவ்வாறு பரப்புவோர் மீது காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்படும். இவை தவிர பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
Related Tags :
Next Story