கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்


கோவில்பட்டி அருகே  டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 March 2020 4:00 AM IST (Updated: 24 March 2020 8:27 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சாயத்து சிறப்பு கூட்டம் 

கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சியில் மயானத்துக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இனாம் மணியாச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.

பஞ்சாயத்து தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவி ரேவதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இனாம் மணியாச்சியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதவி கலெக்டரிடம் வழங்கல் 

பின்னர் அந்த தீர்மான நகலை பஞ்சாயத்து தலைவி ஜெயலட்சுமி தலைமையில், துணை தலைவி ரேவதி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கொண்டு சென்று, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் விஜயாவிடம் வழங்கினர்.

அதனை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story