கொரோனா வைரஸ் பீதியால் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தம்
கொரோனா வைரஸ் பீதியால் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
பெங்களூரு,
கொரோனா வைரஸ் பீதியால் தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
மெட்ரோ ரெயில்கள்
பெங்களூரு ைமசூரு ரோடு முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரையும் ெமட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில்களில் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வந்தனர்.
மேலும் எலச்சனஹள்ளியில் இருந்து அஞ்சனபுரா வரை 6.29 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மைசூரு ரோடுவில் இருந்து கெங்கேரி வரை 8.81 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த ரெயில் பாதை அமைக்கும் பணியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
பணிகள் நிறுத்தம்
இந்த நிலையில் பெங்களூருவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்த வைரஸ் தங்களையும் தாக்கிவிடும் என்று மெட்ரோ ரெயில் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இடையே பீதி நிலவியது. இதன்காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரியான ராதாகிருஷ்ண ரெட்டி என்பவர் கூறுகையில், எலச்சனஹள்ளி முதல் அஞ்சனபுரா வரையும், மைசூரு ரோடு முதல் கெங்கேரி வரையும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. எலச்சனஹள்ளி-அஞ்சனபுரா மெட்ேரா ரெயில் பாதையில் வருகிற ஆகஸ்டு மாதத்திலும், மைசூரு ரோடு-கெங்கேரி பாதையில் வருகிற நவம்பர் மாதமும் மெட்ரோ ரெயில்களை இயக்க முடிவு செய்து இருந்தோம். ஆனால் கொரோனா வைரஸ் பீதி காரணமாக தொழிலாளர்கள் வராததால் தற்போது மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தி வைத்து உள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story