ஆம்பூரில் தங்கியிருந்த சீனா, பிரேசில் நாட்டை சேர்ந்த 4 பேருக்கு மருத்துவ பரிசோதனை
ஆம்பூரில் தங்கியிருந்த சீனா, பிரேசில் நாட்டை சேர்ந்த 4 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
ஆம்பூர்,
கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களையும், தங்கி உள்ளவர்களையும் அரசு கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.
இந்த தொழிற்சாலைகளுக்கு வியாபார ரீதியாக வெளிநாட்டினர் அடிக்கடி வந்து செல்வது வழக்கும். சில தொழிற்சாலைகளில் அவர்கள் தங்கி இருந்து ஷூ ஆர்டர் கொடுப்பதும், தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுவதையும் வழக்கமாக கொண்டு இருப்பர். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி, ஆம்பூரில் பிரபல தனியார் ஷூ கம்பெனிக்கு வணிக ரீதியாக சீனா நாட்டை சேர்ந்த 3 பேரும், பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவரும் என 4 பேர் அந்த தொழிற்சாலையின் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
Related Tags :
Next Story