கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கவர்னர் வேண்டுகோள்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கவர்னர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 March 2020 12:15 AM GMT (Updated: 25 March 2020 12:15 AM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை, 

மராட்டியர்களின் புத்தாண்டான ‘‘குடிபட்வா'' இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாம் குடிபட்வாவை கொண்டாடவும், புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ள போதும், மாநிலம் முன் எப்போதும் இல்லாத ஒரு சூழலை கடந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலை எதிர்கொள்ள அரசு தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும் போது தான் அரசின் முயற்சிகள் வெற்றி அடையும். எனவே கொரோனா வைரஸ் பரவலால் தற்போது நிலவும் சூழலை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டு கொள்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும், நல்ல உடல்நலனையும், மனநிறைவு, வளர்ச்சியையும் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story