ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும்? - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம்
ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்பது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 31-ந் தேதி வரை ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஊரடங்கால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான காய்கறி, பால் போன்ற பொருட்கள் கிடைக்காமல் போய்விடும் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.
இதையடுத்து ஊரடங்கில் எதற்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
* வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகள் மற்றும் அதுதொடர்பான பணிகள்.
* பத்திரிகை மற்றும் செய்தி சேனல்கள்.
* தொலை தொடர்பு, அஞ்சல், இணையதள சேவைகள்
* அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் வினியோகம்.
* காய்கறி, மளிகை பொருட்கள்.
* வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி
மருந்து பொருட்கள்
* உணவு, மருந்து, மருத்துவ பொருட்கள் டெலிவிரி சேவை
* பால், ரொட்டி, பழங்கள், முட்டை, இறைச்சி, மீன் விற்பனை மற்றும் கொண்டு செல்லுதல்.
* பேக்கரி மற்றும் செல்லப்பிராணி உணவு பொருள் கடை.
* ஓட்டல்களில் பார்சல் செய்து உணவை விற்பனை செய்ய மற்றும் வீடுகளுக்கு டெலிவிரி செய்ய அனுமதி.
* ஆஸ்பத்திரி, மருந்துக்கடை, மூக்கு கண்ணாடி கடை, மருந்து உற்பத்தி ஆலை, மருந்து பொருள் கொண்டு செல்ல அனுமதி.
* பெட்ரோல் பங்க், பெட்ரோலிய பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி.
* காவல் பணியில் ஈடுபடுபவா்கள்.
இவை அனைத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story