144 தடை உத்தரவை ஏற்று கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் - அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்
144 தடை உத்தரவை ஏற்று கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர்,
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அன்புசெல்வன் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களிடம் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 840 படுக்கை அறைகளை கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விருத்தாச்சலம், வேப்பூர், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் உள்ளன. 144 தடை உத்தரவை ஏற்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் மருத்துவ கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story