மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவால் கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின - வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை எச்சரித்த போலீசார்


மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவால் கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின - வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை எச்சரித்த போலீசார்
x
தினத்தந்தி 26 March 2020 3:45 AM IST (Updated: 26 March 2020 8:08 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு எதிரொலியாக கடைகள் அடைக்கப்பட்டு, வீதிகள் வெறிச்சோடி இருந்தன. வீட்டை விட்டு வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தேனி,

கொரோனா வைரஸ் பர வாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தேனி மாவட்டத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி இருந்தன. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், சின்ன மனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மருந்துக்கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதி களில் காய்கறி, இறைச்சிக் கடைகள் குறைந்த எண்ணிக் கையில் திறந்து இருந்தன. பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து காய்கறிகள் வாங்கிச் சென்ற னர். தேனி நகரில் சில குடி யிருப்பு பகுதி களில் மட்டும் சிறு,சிறு மளிகை கடைகள் திறந்து இருந்தன.

தேனி நகரில் பிரதான சாலைகளாக உள்ள கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை ஆகிய சாலை களில் உள்ள கடைகள் முழு மையாக அடைக்கப்பட்டு இருந் தது. அத்தியாவசிய பொருட் களான அரிசி, பருப்பு விற்பனை செய்வதற்காக மளிகை கடை களை காலையில் திறக்க முயன்ற வியாபாரிகளை யும் போலீசார் தடுத்து நிறுத்தி னர். பின்னர் பகல் 11 மணிக்கு பிறகு பெரியகுளம் சாலையில் 3 மளிகை கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. அங்கும் கூட்ட மாக மக்கள் நிற்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி னர்.

மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் நேற்று காலையில் வழக்கம் போல் செயல்பட்டது. தேனி உழவர் சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் காய்கறி வாங்குவதற்கு வந்தனர். இதனால், கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கைகளை கழுவிய பின்னரே உழவர் சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் கூட்டமாக நின்று காய்கறி வாங்குவதை தவிர்க் குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அரசு பஸ்கள் இயக்கப்படாத தால், அவை போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பணிமனைகள் முன்பு போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகளுக்காக பஸ்கள் இயக்கப்படாததால் தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் மாவட் டத்தில் உள்ள பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள், மினி பஸ்கள் போன்ற வாகனங்கள் இயக்கப்படாததால் சாலை கள் வெறிச்சோடி கிடந்தன. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் சாலைகளில் அவ்வப் போது செல்வதை காண முடிந்தது.

கொரோனா அச்சுறுத் தலால் கேரள மாநில எல்லை மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலை யில், தேனி நகருக்குள் பிற பகுதிகளில் இருந்து வாகனங் கள் வருவதற்கும் போலீசார் தடை விதித்தனர். அத்தியா வசிய தேவைக்காக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை விசாரணை நடத்திய பின்னர் போலீசார் அனுமதித்தனர். இதற்காக அரண்மனைப்புதூர் விலக்கு, சுப்பன் தெரு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து சாலை களை போலீசார் அடைத்தனர்.

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தேனி உள்பட பல்வேறு இடங் களிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உலா வந்த வண்ணம் இருந்தனர். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தி உள்ள போதிலும் பலர் இவ்வாறு வந்தனர். அவர்களை போலீசார் எச்ச ரித்து திருப்பி அனுப்பி வைத்த னர். மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீ சார் ரோந்து பணி மற்றும் முக்கிய இடங்களில் பாது காப்பு பணியில் ஈடுபட்ட னர்.

தேனி மாவட்ட நிர்வாகம் செயல்படும் வகையில் கலெக் டர் அலுவலகத்தில் பணியாற் றும் அலுவலர்கள், பணியாளர் கள், தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்வதற்கு நேற்று முதல் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் நிலையத்துக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட் டன. அந்த வகையில் கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிப் பட்டி ஆகிய அரசு போக்கு வரத்து கழக பணிமனைகளில் இருந்து தேனி மாவட்ட கலெக் டர் அலுவலகத்துக்கு காலை 9 மணியளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. மீண்டும், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து இந்த பஸ்கள் மாலை 6 மணியளவில் மீண்டும் அதே போக்குவரத்து கழக பணி மனைகளுக்கு இயக்கப்படும்.

அதுபோல், தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலையில் கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய பஸ் நிலையங்களுக்கும், மீண்டும் மாலையில் அந்தந்த ஊர்களில் இருந்து தேனி பஸ் நிலையத்துக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்களில் அரசு அலுவலர் களுக்கு மட்டும் என்று ஸ்டிக் கர் ஒட்டப்பட்டு உள்ளது. அதன்படி, தேனி கலெக்டர் அலுவலகத்துக்கும், பஸ் நிலை யத்துக்கும் நேற்று சிறப்பு பஸ் கள் இயக்கப்பட்டன. அரசு அலுவலர்களை இறக்கி விட்டு விட்டு பஸ்கள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பஸ்களில் பொதுமக்களை ஏற்றுவதற்கு தடை விதிக்கப் பட்டு உள்ளது.

கம்பத்தில் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. அத்தியாவசிய தேவைகளுக் கான மருந்து கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுமே ஆங்காங்கே திறந்து வைக்கப் பட்டிருந்தது. நேற்று காலை 10 மணி முதல் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் கம்பம் வடக்கு போலீசார் கம்பம் நகர் எல்லையான கோசேந்திர ஓடை பகுதியில் தற்காலிக சோதனை சாவடி கள் அமைத்து நகருக்குள் வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

கம்பம்மெட்டு ரோடு, காந்தி சிலை, வ.உ.சி. திடல், அரச மரம், வேலப்பர் கோவில் தெரு ஆகிய சாலைகள் ரோட் டின் குறுக்கே கயிறு கட்டியும், தடுப்பு கம்பிகள் வைத்து மூடப் பட்டன. இதனால் கம்பம் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கு வதற்கு கூட்டம் அதிகம் காணப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நட வடிக்கை கடைப்பிடிக்க வில்லை. வியாபாரிகள், பொது மக்கள் யாரும் முககவசம் அணிந்து வரவில்லை.

போடி பகுதியில் காலை முதலே பொதுமக்கள் நடமாட் டம் குறைந்து காணப்பட்டது. சில இடங்களில் டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் அங்கு கூட்டம் காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் நகர் முழுவதும் ரோந்து சென்று மக்களை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் போடி நகருக்குள் நுழையும் சாலை களில் 5 இடங்களில் தடுப்பு களை ஏற்படுத்தி வாக னங்கள் வராமல் தடுத்தனர். அத்தியா வசிய வாகனங்களை மட்டும் அனுமதித்தனர். இதனைய டுத்து பிற்பகல் முதல் சாலை களில் வாகனங் கள் செல்வது முழுவதும் தடுக்கப்பட்டது.

போடி பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், வெளிநாட்டிலிருந்து கடந்த ஒரு மாதத்திற்குள் வந்தவர்கள் யார், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் வேலை செய்து திரும்பியவர்கள் யார், யார் என்பது குறித்து கணக் கெடுப்பு நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளதையடுத்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்கள் கிராமங்களில் இதுகுறித்த கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதில் போடி அம்மாபட்டி கிராமத் தில் மட்டும் 15 பேர் வெளி நாட்டிற்கு சென்று வந்த விவரம் தெரிய வந்தது. அவர் கள் வீடுகளில் வைத்து தனி மைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சுகாதாரத்துறை யினர் கண்காணித்து வருகின்ற னர். இந்நிலையில் போடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த வர்களுக்கு சிகிச்சை அளிப் பதற்காக தனி வார்டு தொடங் கப்பட்டுள்ளது. போடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எல்லைகள் மூடப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டிப்பட்டி, கடமலை- மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப் பட்டது. கிராமங்களில் அனைத்து பகுதிகளுக்கும் போலீசார் ரோந்து சென்று எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story