கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காஞ்சீபுரத்தில் கிருமிநாசினி தெளிப்பு


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காஞ்சீபுரத்தில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 27 March 2020 4:00 AM IST (Updated: 27 March 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

காஞ்சீபுரம், 

ஊரடங்கு உத்தரவையொட்டி சுற்றுலா நகரமான காஞ்சீபுரம் முடங்கியது. எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும், காஞ்சீபுரம் காந்திரோடு, பஸ் நிலையம், 4 ராஜ வீதிகள் வெறிச்சோடியது. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தனர். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் நகரத்தின் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட், மீன் கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் சப்-கலெக்டர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் முத்து, மற்றும் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருச்சி, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, காஞ்சீபுரம் அடுத்த செட்டிபேடு, பொன்னியம்பட்டறை, படப்பை-மணிமங்கலம் ரோடு உள்பட அனைத்து சாலைகளிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, உள்ளேவும், வெளியேயும் எந்த வாகனங்களை அனுமதிக்கவில்லை.

இதனால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆங்காங்கே சலசலப்பு ஏற்பட்டது.


Next Story