கொரோனா அச்சுறுத்தல்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகம் அடைப்பு


கொரோனா அச்சுறுத்தல்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகம் அடைப்பு
x
தினத்தந்தி 27 March 2020 4:30 AM IST (Updated: 27 March 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பூட்டப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம், மாவட்ட போக்சோ நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் ஆகியவை உள் ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பூட்டப்பட்டது. மேலும் உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

Next Story