மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வானகரம் மீன் மார்க்கெட் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படுகிறது


மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வானகரம் மீன் மார்க்கெட் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படுகிறது
x
தினத்தந்தி 26 March 2020 11:02 PM GMT (Updated: 26 March 2020 11:02 PM GMT)

மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வானகரம் மீன் மார்க்கெட் நாளை முதல் 2 நாட்கள் மூடப்படுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள், விற்பனை செய்யப்படும் எனவும், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள் திறந்திருக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

பொதுவாகவே வார விடுமுறை நாட்களில் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதுவது வழக்கம். அதுவும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் மிகுதியாகவே இருக்கும். அந்த வகையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வானகரம் மீன் மார்க்கெட்டில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் (28, 29-ந்தேதிகளில்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி ஏ.துரை கூறியதாவது:-

கொரோனா தோற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். அந்த வகையில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வருகிற 28, 29-ந்தேதிகளில் (2 நாட்கள்) வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் வழக்கமான நாட்களில் கூட்டத்தை வரைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வானகரம் மீன் மார்க்கெட் நேற்று காலை சில மணி நேரங்கள் மட்டுமே செயல்பட்டு அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story