மாவட்ட செய்திகள்

நாகையில், 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது வழக்கு - 150 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் + "||" + In Nagai, 144 violated the injunction Case against 169 persons - 150 motorcycles seized

நாகையில், 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது வழக்கு - 150 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

நாகையில், 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது வழக்கு - 150 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
நாகையில் 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 150 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆதலால் தேவையின்றி பொதுமக்கள் வெளியில் நடமாடக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் மோட்டார்சைக்கிளில் சுற்றித்திரிந்ததாக நாகை மாவட்டம் முழுவதும் 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 150 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியவர்கள் மீது 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மது குற்றங்களை தடுக்கும் வகையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மது கடத்திய 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் முககவசம் இல்லாமல் சாலைகளில் செல்பவர்களை போலீசார் எச்சரித்து, அறிவுரை வழங்கி வருகின்றனர். மேற்கண்ட தகவலை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 62 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சமூகவலை தளங்களில் பரவிய வீடியோ காட்சி: போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி சண்டை போட்ட பெண் மீது வழக்குப்பதிவு
சென்னையில் போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி பெண் ஒருவர் சண்டை போடும் காட்சி நேற்று சமூகவலை தளங்களில் பரவியது. அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
2. மராட்டியத்தில் மேலும் 66,159 பேருக்கு கொரோனா; 771 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் கடந்த 14-ந் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
3. தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு
தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு.
4. தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு
தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு.
5. மளிகை கடைக்காரரிடம் பண மோசடி புகார்: பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு
மளிகை கடைக்காரரிடம் பண மோசடி புகார் தொடர்பாக பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.