தடைஉத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிந்த 90 பேர் மீது வழக்கு - 100 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
புதுவையில் தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றிதிரிந்த 90 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் களை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதுவை மாநிலத்தில் 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது. புதுவை மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அதே போல் நகரம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே தடுப்பு அமைத்து சாலைகளை மூடியுள்ளனர்.
தடைஉத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி புதுவை மாநிலம் முழுவதும் 58 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் லாஸ்பேட்டை, கோரிமேடு, உருளையன்பேட்டை, கிருமாம்பாக்கம், திருக்கனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தடையை மீறி சுற்றித்திரிந்ததாக 64 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல் நேற்று காலை தவளக்குப்பம், திருக்கனூர் காவல்நிலையத்தில் 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள னர். மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 90 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
புதுவையில் இதுவரை தடையை மீறி தேவையில்லா மல் சாலைகளில் சுற்றி திரிந்ததாக 148 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. இதேபோல் தடை உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்து அளவுக்கு அதிகமாக மக்களை கூட்டி வைத்திருந்த 18 வியாபாரிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்துவதற்காக முதலியார்பேட்டை கெங்கையம்மன் கோவில் அருகில் பழுது அடைந்த கார்கள், குளிர்சாதன பெட்டி மூலம் தடுப்புகள் உருவாகி சாலையில் வைத்துள்ளனர்.
மேலும் முதலியார்பேட்டை பட்டம்மாள் நகருக்கு செல்லும் பாதையில் சிமெண்டால் ஆன பெரிய குழாய் சாலையில் போட்டு தடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் காமராஜர் சாலை, கதிர்காமம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் மற்றும் குறுக்கு வழியில் செல்லும் சாலையிலும் பெரிய கயிறு மூலம் சாலையில் கட்டி வைத்துள்ளனர்.சாலைகளில் தடுப்பு கட்டை போட்டு தடை செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையில் குறுக்கு வழிகள் கிடக்கிறதா? என்று பார்த்து அதன் வழியாக சென்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story