மராட்டியத்தில் 153 பேருக்கு கொரோனா வைரஸ் - சாங்கிலியில் ஒரே நாளில் 12 பேருக்கு பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் சாங்கிலியில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநிலத்தின் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்து உள்ளது.
அதிகபட்சமாக சாங்கிலியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மூலமாக சாங்கிலியில் கொரோனா பரவியது. தற்போது சாங்கிலியில் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்து உள்ளது.
இதில் பலர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல புனே, பிம்பிரி, சின்ஞ்வாட்டில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 5 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story