கொரோனா சந்தேகம்: கோவை பெண் டாக்டர், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதி


கொரோனா சந்தேகம்: கோவை பெண் டாக்டர், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 28 March 2020 4:30 AM IST (Updated: 28 March 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

கோவையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்துடன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை,

கோவை போத்தனூரில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு கடந்த 23-ந் தேதி 45 வயது பெண் டாக்டர் ஒருவர் மாறுதலாகி வந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்தது. இதைதொடர்ந்து அவரை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாமோ? என்ற சந்தேகத்தில் அவரது ரத்த மாதிரி மற்றும் சளி ஆகியவை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

இதற்கிடையே கடந்த 23-ந் தேதி முதல் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் யார்? என்பது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விவரங்கள் தெரிந்ததும் அவர்களுடைய உடல்நிலை பரிசோதிக்கப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே பெண் டாக்டர் பணியாற்றி வந்த ஆஸ்பத்திரி தங்கி இருந்த இடம் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் (ட்ரோன்) மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story