உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க போதிய உயிர்காக்கும் மருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம்,
இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கி, மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அத்தியாவசிய தேவைக்காகவும், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காகவும் மாவட்ட கனிம வள மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியை வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் உள்பட சுகாதாரத்துறை, நோய் தடுப்பு மருந்துத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 8 பேர் கொரோனா அறிகுறி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுளள 3 பேர் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.2 கோடியையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.1 கோடியையும் முதல்-அமைச்சர், ஒதுக்கீடு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி பல்வேறு சிறப்பு நிதியில் இருந்து ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் பல்வேறு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், போதுமான படுக்கை வசதிகளை வாங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முககவசம், கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை இங்கேயே மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தட்டுப்பாட்டை போக்குவதற்காக மாநிலத்தில் இருந்து தினந்தோறும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அனைத்து உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தேவையான படுக்கை வசதிகளை பெறவும் மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள மருந்துவ வசதி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story