பஸ் நிலையத்துக்கு மாறிய உழவர் சந்தை மக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகள் வாங்கினர்
தேனியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ் நிலையத்துக்கு உழவர் சந்தை மாற்றப்பட்டது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கினர்.
தேனி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு, பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேனி நகரில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்து இருந்தன. அந்த கடைகளும் பிற்பகலில் அடைக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் கடைகள் திறந்து இருந்தன. மருந்து கடைகள் காலை முதல் இரவு வரை திறந்து இருந்தன. மேலும் அரசு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், அந்த பஸ்களில் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருக்கைகளில் இடைவெளிவிட்டு அமராமல், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஒன்றாக அமர்ந்துபயணம் செய்தனர்.
இந்தநிலையில் தேனி உழவர் சந்தைக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்றனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. இந்த நெரிசலை தவிர்க்கும் வகையில் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. நேற்று முதல் பஸ் நிலையத்தில் உழவர் சந்தை செயல்பட தொடங்கியது. இதைத்தொடர்ந்து இடைவெளிவிட்டு கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடைகள் முன்பு இடைவெளிவிட்டு வட்டம் போடப்பட்டு இருந்தது. அந்த வட்டத்தில் நின்று பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி சென்றனர்.
உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் 80 பேருக்கு பஸ் நிலையத்தில் மதுரை, திண்டுக்கல், குமுளி பஸ்கள் நிற்கும் பகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அதுபோல், உழவர் சந்தைக்கு வெளியே சாலையோரம் அமர்ந்து காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதி ஒதுக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 20 டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறி விற்பனை மும்முரமாக நடந்தது.

Related Tags :
Next Story