கடலூருக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1840 பேரை கண்டறியும் பணி தீவிரம் - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்


கடலூருக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1840 பேரை கண்டறியும் பணி தீவிரம் - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
x
தினத்தந்தி 27 March 2020 9:45 PM GMT (Updated: 28 March 2020 4:29 AM GMT)

கடலூருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1840 பேரை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார். கடலூரில் கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர்,

வெளிநாடுகளில் இருந்து சென்னை வழியாக கடலூர் மாவட்டத்துக்கு வந்த 625 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். இந்நிலையில் குடியேற்றத்துறையிடமிருந்து தற்போது வந்த தகவலின் பேரில் இன்னும் 3,090 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்தது தெரிய வந்தது. இவர்களை கண்டுபிடிக்கும் பணியை தொடங்கி உள்ளோம்.

அவர்களில் இதுவரையில் 1,250 பேர் கண்டறியப்பட்டு அவர்களது வீடுகளில் அதற்கான அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் கைகளிலும் அதற்கான முத்திரை குத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1840 பேரை கண்டறியம் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குத்தடையின்றி கிடைத்திடவும், அப்பொருட்களின் விலை உயராமல் இருப்பதை கண்காணிக்கவும் 3 அதிகாரிகள் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சென்னை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து காய்கறி, அரிசி, மளிகைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், கடலூர் மாவட்டத்தில் விளையும் பொருட் களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுப்பார்கள்.சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனாவை பரிசோதிக்கும் ஆய்வகம் விரைவில் தொடங்கப்படும். கடலூர், வடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் காய்கறி, மீன், இறைச்சி சந்தைகளை பெரிய திறந்த வெளி மைதானம், பஸ் நிலையங்களில் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

Next Story