ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் மளிகை பொருட்களையும் டெலிவிரி செய்ய வேண்டும் - மும்பை மாநகராட்சி வேண்டுகோள்
ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் மளிகை பொருட்களையும் டெலிவிரி செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வருகின்றனர். இதனால் மார்க்கெட், மளிகை கடைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தடுக்கும் வகையில் மளிகை பொருட்களை, மும்பை மாநகராட்சி ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவிரி செய்ய வேண்டுகோள் விடுத்து உள்ளது.
ஸ்விகி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் ஓட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவுப்பொருட்களை டெலிவிரி செய்து வருகின்றன. தற்போது உள்ள சூழலில் அந்த நிறுவனங்கள் மளிகை கடைகளுடன் சேர்ந்து, மளிகை பொருட்களையும் பொது மக்களுக்கு டெலிவிரி செய்யுமாறு மாநகராட்சி யோசனை கூறியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க இந்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story