அவுரங்காபாத்தில் குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலி


அவுரங்காபாத்தில் குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 29 March 2020 4:00 AM IST (Updated: 29 March 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத்தில் குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை, 

அவுரங்காபாத்தில் உள்ள சோய்காவ் பகுதியை சேர்ந்த ரதோட் (வயது19), பல்லவி (12) மற்றும் ஓம் சவான் (10) ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் மாலை மவுல்கேடா சிவர் பகுதியில் உள்ள குளத்திற்கு மாட்டு வண்டியில் சென்றனர். அவர்கள் மாடுகளுக்கு தண்ணீர் காட்ட வண்டியை குளத்தில் இறக்கினர்.

அப்போது எதிர்பாராத விதமாக மாட்டு வண்டி தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் வாலிபர் ரதோட், சிறுமி பல்லவி, சிறுவன் ஓம் சவான் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த கிராம மக்கள் தண்ணீரில் மூழ்கிய சிறுமி உள்பட 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் சிறுமி உள்பட 3 பேரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் மாடுகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story