சளி, காய்ச்சல், மூச்சுத்திணறலால் கர்ப்பிணி திடீர் சாவு - போலீஸ் விசாரணை


சளி, காய்ச்சல், மூச்சுத்திணறலால் கர்ப்பிணி திடீர் சாவு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 March 2020 3:45 AM IST (Updated: 29 March 2020 9:36 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறலால் கர்ப்பிணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருடைய 27 வயது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைவலி, காய்ச்சல், சளி ஆகியவை இருந்துள்ளது. இதனால் அவர் மேல்விஷாரம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து சாதாரண காய்ச்சல் தான் என கூறி மருந்து வழங்கி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த கர்ப்பிணிக்கு நேற்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை ஆட்டோ மூலம் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து அவரது கணவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரிசோதனை முடிவுகளுக்கு பிறகே அவரது இறப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story