பெரம்பலூரில், சமூக இடைவெளிக்கு இடவசதி இல்லாத காய்கறி மார்க்கெட்டுக்கு ‘சீல்’
பெரம்பலூரில் சமூக இடைவெளிக்கு இடவசதி இல்லாத காய்கறி மார்க்கெட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கொரோனாவை தடுக்க வீடுகள் முன்பு பொதுமக்கள் வேப்பிலை தோரணம் கட்டியுள்ளனர்.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவும், தமிழக அரசின் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளன. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் விற்பனை நிலையம், காய்கறி, மளிகை, மருந்து, இறைச்சி, ரேஷன் கடைகள் ஆகியவற்றை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், லாரிகள், ஆட்டோக் கள், கனரக வாகனங்கள் ஓடாததாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின் றன. சாலையில் தேவையில்லா மல் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற போதிய இடவசதி இல்லாததால், அந்த மார்க் கெட்டை நேற்று நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தற்காலிகமாக பூட்டி ‘சீல்’ வைத்தார். மேலும் அந்த மார்க்கெட்டை, ஊரடங்கு உத்தரவு முடியும் வரை பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள இடத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட் டார். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெரம்பலூர் உழவர் சந்தை அருகே ஏற்கனவே காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயி களுக்கு அடுத்து, மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அமைத்து விற்பனை செய்ய வுள்ளனர். இந்த கடைகளும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையே செயல்படும் என்று கூறப்படுகிறது.
இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக பொது மக்களிடையே பேசப்படுவ தால், தற்போது அவர்கள் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. ஒரு சில ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள், மீன் கடைகள் வாடிக்கையாளர் களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க குன்னம் தாலுகா வசிஷ்டபுரம் ஊராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் மஞ்சள், வேப்பிலையை அரைத்து, அதனை தண்ணீரில் கலந்து கிருமி நாசினியாக டிராக்டரில் கொண்டு சென்று தெளித்தனர். மேலும் பெரம்பலூர் தாலுகா நாவலூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வீடுகளின் முன்பு வேப்பிலையை தோர ணமாக கட்டியுள்ளனர். கிரா மத்தின் முக்கிய பகுதிகளிலும் வேப்பிலை தோரணம் கட்டப்பட்டுள்ளது. கிராமம் முழுவதும் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் தெளிக் கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சி சார்பிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரு கிறது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக் களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்வதற்கான வாகனங்களுக்கு அனுமதி சீட்டு அந்தந்த பகுதி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரால் வழங்கப்படு கிறது. எனவே விற்பனையா ளர்கள் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற, அவர் களை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story