சமூக விலகலை பின்பற்றாத மளிகை வியாபாரிகள் மீது நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை


சமூக விலகலை பின்பற்றாத மளிகை வியாபாரிகள் மீது நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 March 2020 10:15 PM GMT (Updated: 29 March 2020 4:07 AM GMT)

சமூக விலகலை பின்பற்றாத மளிகை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாள்தோறும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் நகரில் எம்.ஜி. சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள மளிகை கடைகளில் சமூக விலகலை பின்பற்றி மக்கள், பொருட்களை வாங்குகிறார்களா? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு சில கடைகளில் மக்கள் கூட்டமாக நின்று மளிகை பொருட்களை வாங்கி வந்தனர். உடனே அங்கு சென்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், பொதுமக்களை ஒழுங்குப்படுத்தி மளிகை பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் இதனை அந்தந்த கடை வியாபாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், மக்களை ஒழுங்குப்படுத்த தங்கள் கடைகள் முன்பு 1 மீட்டர் இடைவெளியில் நிற்பதற்கு வசதியாக வெள்ளைக்கோடு போட வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு சமூக விலகலை பின்பற்றாத கடை வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்தார்.

இதைபோல் செஞ்சியிலும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் ஆய்வு நடத்தினார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை அனைவரும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து ஒலி பெருக்கி மூலம் விளக்கி கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சுப்பிரமணியன், குமார், தனிப்பிரிவு பிரபாகரன் 

Next Story