நெல்லை மாவட்டத்தில் தினமும் 1500 குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் தினமும் 1500 குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 29 March 2020 10:30 PM GMT (Updated: 29 March 2020 5:16 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் தினமும் 1500 குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலை கட்டுபடுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் அவர்களின் வீடுகளில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களின் விவரங்கள் பெறப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவுறுத்தலின்படி 14 நாட்களுக்கு தொடர்ந்து நிலவேம்பு கசாயம் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்ற அடிப்படையில் நெல்லை மாவட்ட சித்த மருத்துவ கல்லூரி மூலம் தயாரிக்கப்பட்ட நில கசாயம், கை கழுவும் கிருமி நாசினி மாவட்ட முழுவதும் வழங்க திட்டமிடபட்டு முதற்கட்டமாக வள்ளியூர் பகுதியில் 500 குடும்பங்களுக்கும், சேரன்மகாதேவி பகுதியில் 500 குடும்பங்களுக்கும், மானூர் பகுதியில் 500 குடும்பங்களுக்கும் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு நில வேம்பு கசாயம், கை கழுவும் கிருமி நாசினி சம்மந்தப்பட்ட தாசில்தார் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் 1500 குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தாங்கள் தங்களின் வீட்டில் தனி அறையில் தன்னைத்தானே தனிமைபடுத்திக் கொள்வது அவசியம் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் இன்றிமையாதது.

காய்ச்சல், இருமல், மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் காலதாமதமின்றி உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது மாவட்ட அவசர கட்டுபாட்டு அறையையோ தொடர்பு கொள்ளவேண்டும். நிலவேம்பு கசாயத்தை காலை, மாலை அருந்தவும் மேலும் விபரங்களுக்கு 24 மணி நேர அவசர கட்டுபாட்டு அறை எண்: 1077 அல்லது 0462–2501070 வாட்ஸ்அப் எண்: 6374013254, 6374001902 என்ற எண்களைத் தொடா;பு கொள்ளலாம்.

 இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

Next Story