ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் குடும்பத்துடன் விளையாடி பொழுதை கழிக்கும் பொதுமக்கள்


ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் குடும்பத்துடன் விளையாடி பொழுதை கழிக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 March 2020 9:00 PM GMT (Updated: 29 March 2020 6:00 PM GMT)

ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் குடும்பத்துடன் விளையாடி பொதுமக்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

ஈரோடு, 

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பொழுதை கழிப்பதற்காக தாயம், பரமபதம், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். சிவகிரி பகுதியில் ஒரு வீட்டின் முன்பு குடும்பத்தினர் சந்தோ‌ஷமாக தாயம் விளையாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாயம் போன்ற விளையாட்டுகளை குடும்பத்துடன் விளையாட நேரம் கிடைக்காமல் பலரும் உள்ளனர். வேலை, படிப்பு என்று அவசர காலத்தில் சுற்றி கொண்டிருக்கும் நமக்கு, குடும்பத்துடன் ஒரு வேளை ஒன்றாக சேர்ந்து சாப்பிடக்கூட முடியாத நிலையில் இருக்கிறோம். தற்போது இந்த ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி குழந்தைகளுக்கும் பல்வேறு விளையாட்டுகளை கற்று கொடுத்து, மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம்’’, என்றனர்.

Next Story