தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்


தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு - மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 29 March 2020 11:00 PM GMT (Updated: 29 March 2020 7:48 PM GMT)

தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி, 

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழை கூலித்தொழிலாளர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், நரிக்குறவர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இருக்கின்ற இடத்திலேயே அவர்களை கண்டறிந்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநகர பகுதிகளில் உணவின்றி தவிக்கும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு உணவு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், சுகாதார அலுவலர் ஹரி கணேசன் 9842530292, சிறப்பு வருவாய் அலுவலர் கே.வி.கணேசன் 9994025682, வருவாய் உதவி ஆய்வாளர்கள் கண்ணன் 9486025771, ராதாகிருஷ்ணன் 9791426290 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். கிழக்கு மண்டல பகுதிகளில் வசிப்பவர்கள் சுகாதார அலுவலர் ராஜசேகரன் 8056347075, சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஜான்சன் 9244621614, வருவாய் உதவியாளர்கள் செந்தில்குமார் 7904819064, கணபதி சுந்தரம் 9842364387 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கு மண்டல பகுதியில் உள்ளவர்கள் சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் 9443528621, சிறப்பு வருவாய் ஆய்வாளர் வீரக்குமார் 9994636796, வருவாய் உதவியாளர்கள் ராஜேஷ் 8072528511, முனிராஜ் 9629206705 ஆகியோரையும், தெற்கு மண்டல பகுதிகளுக்கு உட்பட்டவர்கள் சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் 9080769246, சிறப்பு வருவாய் ஆய்வாளர் நசரேன் 9865429481, வருவாய் உதவி ஆய்வாளர்கள் மலைச்சாமி 9442466256, ஆசீர் 9790087870 ஆகியோரையும் தொடர்பு கொண்டு உணவுபெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story