சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை,
தங்களது குடும்ப உறுப்பினர்கள் இறப்பு, திருமணம் மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக, சென்னை நகருக்குள்ளோ அல்லது வெளிமாவட்டங்களுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்ல விரும்புபவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 7530001100 என்ற எண்ணுக்கு, குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ, உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால், உரிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நேற்று இதுபோன்ற அனுமதி சீட்டுக்களை பெறுவதற்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரிய அளவில் கூட்டமாக பொதுமக்கள் கூடிவிட்டனர்.
இதனால் கமிஷனர் அலுவலக வாசல் மூடப்பட்டது. நேற்று சுமார் 5 ஆயிரம் பேர் இது தொடர்பாக விண்ணப்பமனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story