‘வெளிமாநிலங்களில் இருந்து திரும்புபவர்களை தடுத்து நிறுத்துங்கள்’ - அரசுக்கு கவர்னர் உத்தரவு


‘வெளிமாநிலங்களில் இருந்து திரும்புபவர்களை தடுத்து நிறுத்துங்கள்’ - அரசுக்கு கவர்னர் உத்தரவு
x
தினத்தந்தி 29 March 2020 11:15 PM GMT (Updated: 29 March 2020 11:02 PM GMT)

வெளிமாநிலங்களில் இருந்து திரும்புபவர்களை தடுத்து நிறுத்தவேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மும்பை மற்றும் புறநகர் பகுதியில் வேலை செய்து வந்த குஜராத், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஏராளமானோர் நடைபயணமாக சென்று மாநில எல்லைகளை கடக்க முயற்சிக்கின்றனர்.

இதேபோல வெளிமாநிலங்களில் தங்கி வேலை செய்து வந்த மராட்டிய தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊர் திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில அரசை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நாக்பூர், அமராவதி, நாசிக், புனே, கொங்கன், அவுரங்காபாத் ஆகிய 6 மண்டல கமிஷனர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளிமாநிலங்களில் இருந்து திரும்புவர்களை அந்தந்த மாநிலங்களிலேயே தங்கியிருக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடுமாறு மண்டல கமிஷனர்களை கவர்னர் அறிவுறுத்தினார்.

Next Story