திருவாரூர் அருகே, வெளிநபர்கள் ஊருக்குள் நுழைய தடைவிதித்த மக்கள்


திருவாரூர் அருகே, வெளிநபர்கள் ஊருக்குள் நுழைய தடைவிதித்த மக்கள்
x
தினத்தந்தி 30 March 2020 3:45 AM IST (Updated: 30 March 2020 8:24 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே வெளிநபர்கள் ஊருக்குள் நுழைய தடைவிதித்து மக்கள் கயிறு கட்டி உள்ளனர்.

திருவாரூர், 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க பல இடங்களில் மக்கள் தங்களுக்குள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆதிச்சமங்கலத்தில் வெளி நபர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு எல்லை பகுதியில் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்்சியாக திருவாரூர் அருகே புலிவலத்தில் வெளி நபர்கள் யாரும் வீட்டிற்குள் வர வேண்டாம் என எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் சில தெருக்களில் வெளிநபர்கள் ஊருக்குள் நுழைய கிராம மக்கள் தடை விதித்து கயிறு கட்டினர். மேலும் அந்த கயிற்றில் சிகப்பு துணிகள் மற்றும் வேப்பிலை கட்டப்பட்டு இருந்தது.

Next Story